தெல்/மாபெரியதென்ன தமிழ் மகா வித்தியாலயம்

வரலாறு

சிறுவர் தின விழா

வாணி விழா

க/பொ/த உயர் தர பரீட்சை 2024

IMG-20241009-WA00751.jpeg
IMG-20241013-WA0037.jpeg
f9543b32-9090-11ef-8fa2-0242ac11000f.jpeg

 

பாடசாலை பற்றிய ஒரு கண்ணோட்டம்

 

மா மலைகள் நிறைந்த மத்திய மலை நாட்டின் தெல்தெனிய கல்வி வலயத்தில் மகாபெரியதென்ன தமிழ் மகா வித்தியாலயம் என்ற பெயரில் நூற்றாண்டினையும் கடந்து வலயத்தில் தமிழ்மொழி மூல பாடசாலைகளில் முதல் தர பாடசாலையாக திகழ்கின்ற 1ஊ பாடசாலை ஆகும். எமது பாடசாலையில் 1917ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் திகதி வெஸ்லின் மிஷன் என்னும் சபையினால் ஓர் ஆசிரியரையும் 13 மாணவர்களையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

1917ஆம் ஆண்டு தொடக்கம் 1922ஆம் ஆண்டு வரை வெஸ்லின் மிஷன் சபையின் கீழ் திரு.லட்சுமணன், திரு.பொன்னையா, திரு.முருகானந்தம், திரு.ஏ.எம்.ஜோசப் போன்றோர்கள் தலைமை ஆசிரியர்களாக பொறுப்பேற்று கடமையாற்றி உள்ளார்கள். அத்தோடு இக்காலகட்டத்தில் மாணவர்கள் தென்னோலையால் வேயப்பட்ட குடில்களிலும், புளிய மரத்தடியிலும், மண் தரையிலும் அமர்ந்தே கற்றார்கள் என்று கூறப்படுகின்றது.

1922ஆம் ஆண்டு வெஸ்லின் மிஷன் சபையினால் இப்பாடசாலை தோட்ட முகாமையாளரிடம் கையளிக்கப்பட்டு அன்று முதல் தோட்ட பாடசாலைகளில் ஒன்றாக செயல்பட தொடங்கியது. இக்காலத்தில் பாடசாலைக்கு முதலாவது கட்டிடமும் ஆசிரியர் விடுதியும் அமைத்துக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சேவையாற்றிய அதிபர் திரு.ஏ.எம்.ஜோசப் அவர்கள் ஓய்வு பெற்ற பின் அவரது மகனான திரு.ஜே.பிளீமூஸ் கிரகி ஜோசப் அவர்கள் 1958ஆம் ஆண்டு அதிபராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து தோட்டப்புற பாடசாலையாக இயங்கிய இப்பாடசாலை 1977இல் அரசினர் பாடசாலையாக மாற்றம் அடைந்து செயல்பட தொடங்கியது. பின் 1984 இல் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை இரண்டு ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. அதன் பின் 1986 ஆம் ஆண்டு தொடக்கம் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாடசாலைக்கு இரண்டாவதும் மூன்றாவதும் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு அமைச்சர் திரு.சௌ.தொண்டமான் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 2003 ஆம் ஆண்டு வரை அதிபராக திரு.ஆர். ராஜேந்திரன் அவர்களும் பின் 2003 தொடக்கம் 2011 வரை திரு.கே. மனோகரன் அவர்கள் அதிபராகவும் கடமையாற்றினர். தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அதிபராக திரு.எஸ். சண்முகநாதன் அவர்களும் கடமையாற்றி வருகின்றார்.

ஆரம்ப காலங்களில் தரம் ஐந்து வரை மட்டும் காணப்பட்ட தரங்கள் பின் தரம் 9 வரை உயர்த்தப்பட்டு பின் தரம் 11 வரை உயர்த்தப்பட்டு இப்போது (2004 ஆம் வருடத்திற்கு பின்) க.பொ.த உயர்தர கலை பிரிவுடன் கொண்ட 1ஊ தர பாடசாலையாக 320 மாணவர்களையும் 31 ஆசிரியர்களையும் 2 கல்விசாரா ஊழியர்களையும் கொண்டு இயங்குகின்றது. மற்றும் பாடசாலைக்கு 2011ஆம் ஆண்டு இரண்டு மாடி கட்டிடம் ஒன்றும் கிடைக்கப்பெற்றது. தற்போது மைதானம் கணினியறை, நூலகம், மனையியல் கூடம் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது.

கடந்த காலங்களின் போது எமது பாடசாலையின் பொது பரீட்சை பெறுபேறுகளை எடுத்து நோக்கினால் ஒவ்வொரு வருடமும் சகல பெறுபேறுகளும் அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலை பிரிவில் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். அத்தோடு கல்வியியற்; கல்லூரிக்கும் தெரிவாகியும் உள்ளனர். அதேபோன்று க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றதோடு சித்தி பெற்றோரின் வீதமும் அதிகரித்து வலயத்தில் உள்ள தமிழ்மொழி மூல பாடசாலைகளில் முதல் இடத்தினையும் பெற்றுள்ளது. சிறந்த பெறுபேற்றினை பெற்ற மாணவர்கள் உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவு, டீ.வுநஉஇ நு.வுநஉஇ வர்த்தக பிரிவுகளை கற்பதற்காக வேறு பாடசாலைக்கு சென்று சிறந்த பெறுப்பேற்றினையும் பெற்றுள்ளனர். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையினை நோக்கும் போது ஒவ்வொரு வருடமும் குறைந்தது இரு மாணவரேனும் வெட்டு புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளதோடு பரீட்சைக்கு தோன்றிய பெரும்பாலான மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளையும் பெற்று வருகின்றனர்.

கல்வி, கல்விசார் வளர்ச்சியுடன் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் எமது மாணவர்களின் வளர்ச்சி பாராட்டப்பட வேண்டிய விடயமாக காணப்படுகின்றது. எமது மாணவர்கள் வலயமட்டத்திலும் மாகாண மட்டங்களிலும் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியீற்றிதோடு அகில இலங்கை ரீதியாகவும் போட்டிகளில் பங்குபெற்று உள்ளனர் என்பது சிறப்பம்சமாகும். அண்மை காலங்களில் கரப்பந்து, வலைப்பந்து, சதுரங்கம் போன்ற விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்களின் விளையாட்டு துறை மேம்படுத்தப்படுகின்றது.

பலரது அயராத உழைப்பினாலும் அர்ப்பணிப்பினாலும் பல வெற்றிகளை கண்டுள்ளது எமது பாடசாலை. அதிபர்களாக செயலாற்றிய மற்றும் தற்போது செயலாற்றிக் கொண்டிருக்கும் அதிபர் திரு.எஸ்.சண்முகநாதன் அவர்களின் சிறந்த தலைமைத்துவமும் ஆலோசனையும் வழிகாட்டலும் இப்படசாலை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது எனலாம்.

மேலும் பிரதி அதிபர்களின் ஒத்துழைப்பும் ஊக்கமும் பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களின் உணர்வுமிக்க உழைப்பும் சகல செயற்பாடுகளும் சாத்தியமாவதற்கு வழியமைத்துள்ளது. பெற்றோர், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் அனைவரினதும் ஒத்துழைப்புமே இப் பாடசாலை இவ்வாறான ஒரு வளர்ச்சியை கண்டுள்ளது எனலாம்.