மா மலைகள் நிறைந்த மத்திய மலை நாட்டின் கண்டி மாவட்டத்தில் தெல்தெனிய கல்வி வலயத்தில் எமது பாடசாலை அமைந்துள்ளது. மகாபெரியதென்ன தமிழ் மகா வித்தியாலயம் என்ற பெயரில் நூற்றாண்டினையும் கடந்து வலயத்தில் தமிழ்மொழி மூல பாடசாலைகளில் முதல் தர பாடசாலையாக திகழ்கின்ற 1C பாடசாலை இதுவாகும். எமது பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் முதன்மை மற்றும் இடைநிலை என இரண்டு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது மைதானம், கணினியறை, நூலகம், மனையியல் கூடம் போன்ற வசதிகளையும் கொண்டு கல்விசார் பல பெறுபேறுகளையும் இணைபாடவிதான செயற்பாடுகளில் பல வெற்றிகளையும் ஈட்டியுள்ளது
ஒழுக்கம் நிறைந்த ஆளுமைமிக்க மனிதவளத்தை உருவாக்குவோம்
கிடைக்கின்ற வளங்களை பயனுறுதிமிக்கதாக்கி தேர்ச்சிமிகு மனித சமூகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்